Today Rasipalan: இன்றைய ராசிபலன் 15.7.2026 - இந்த ராசிக்காரர்கள் சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வீடு மாற்றம், பற்றி சிந்திப்பீர்கள். திருமண முயற்சிகள் கைகூடி வரும். தொழில் ரீதியான பயணம் பலன் தரும்.

ரிஷபம்

சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். வரவு எதிர்பார்த்தபடி உண்டு. வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும்.

மிதுனம்

நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

கடகம்

கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். கைவிட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும்.

சிம்மம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும்.

கன்னி

நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலை கொடுக்கும் நாள். நாடு மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

துலாம்

நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். வரவு வந்தாலும் அதை மீறிய செலவுகளும் உருவாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.

விருச்சிகம்

இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

தனுசு

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

மகரம்

மனக்குழப்பம் அகலும் நாள். வருமானம் திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபார முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

கும்பம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்

வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண சில அனுபவமிக்கவர்களை சந்திப்பீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com