

எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும்.
யோகமான நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு.
செல்வாக்கு உயரும் நாள். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கைநழுவிச்சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
சவால்களை சமாளிக்கும் நாள். குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும்.
முக்கிய புள்ளிகளை சந்தித்து மகிழும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக நடந்தவர்கள் மனம் மாறுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவர்.
மனக்குழப்பம் அகலும் நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.