Today Rasipalan: இன்றைய ராசிபலன் 11.7.2026 - இந்த ராசிக்காரர்கள் குறைகள் அகல குகனை வழிபட வேண்டிய நாள்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

வரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

ரிஷபம்

விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்துசேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

கடகம்

காரிய வெற்றி ஏற்படும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் நன்மை உண்டு. எதையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடம், பூமியால் லாபம் உண்டு. தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

கன்னி

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

துலாம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நீண்ட நாளைய நட்பு பகையாகலாம். அலுவலகப் பணிகளில் பிரச்சனைகள் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். வரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக பயணங்கள் ஏற்படலாம்.

தனுசு

உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். அலங்காரப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

மகரம்

குறைகள் அகல குகனை வழிபட வேண்டிய நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள்.

கும்பம்

புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

மீனம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com