Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
ராசிபலன்
Published on

மேஷம்

அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகள் முடிவடையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

ரிஷபம்

தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். கை விட்டுப்போன பொருள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

மிதுனம்

திறமை பளிச்சிடும் நாள். திடீர் வரவு உண்டு. நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

கடகம்

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றுவீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும்.

சிம்மம்

நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.

கன்னி

யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

துலாம்

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். விரயங்கள் கூடும்.

விருச்சிகம்

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

தனுசு

வசதிகள் பெருகும் நாள். புதுமுயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

மகரம்

பாசம் காட்டுபவர்களின் வேஷம் கலையும் நாள். பணப்பிரச்சனை அதிகரிக்கும். வேலையாட்களால் மனநிம்மதி குறையலாம்.

கும்பம்

தேவைகள் பூர்த்தியாகும் நாள். நண்பர்களின் உதவி கிடைக்கும். அன்னிய தேசத் தொடர்பு ஆதாயம் தரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மீனம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். தொழிலை விரிவுசெய்யும் முயற்சி கைகூடும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com