Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 ஜூலை 2026: குறுக்குத்துறை முருகப்பெருமான் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Murugan Abhishekam
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-25 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : நவமி காலை 6.13 வரை பிறகு தசமி மறுநாள் விடியற்காலை 4.04 வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : அசுவினி காலை 11.24 வரை பிறகு பரணி

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - வரவு

ரிஷபம் - உழைப்பு

மிதுனம் - சுகம்

கடகம் - மகிழ்ச்சி

சிம்மம் - ஆதரவு

கன்னி - களிப்பு

துலாம் - முயற்சி

விருச்சிகம் - நட்பு

தனுசு - கடமை

மகரம் - இன்பம்

கும்பம் - திறமை

மீனம் - பயணம்

X

Maalai Malar
www.maalaimalar.com