

பராபவ ஆண்டு, ஆடி-1 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை காலை 10.50 வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : மகம் இரவு 11.24 வரை பிறகு பூரம்
யோகம் : மரண / சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
வளர்பிறை சதுர்த்தி விரதம். தட்சிணாயன புண்ணிய காலம். தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் பவனி. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதியுலா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
மேஷம் - ஓய்வு
ரிஷபம் - கடமை
மிதுனம் - வரவு
கடகம் - ஜெயம்
சிம்மம் - கீர்த்தி
கன்னி - உதவி
துலாம் - கனிவு
விருச்சிகம் - பாராட்டு
தனுசு - உயர்வு
மகரம் - அன்பு
கும்பம் - லாபம்
மீனம் - திறமை