நெல்லையில் தாமிரபரணிக்கு சிறப்பு ஆரத்தி

தாமிரபரணி நதி பிறந்த நாளாக கருதப்படும் வைகாசி மாதம் பவுர்ணமி நாளையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நெல்லையில் தாமிரபரணிக்கு சிறப்பு ஆரத்தி
நெல்லையில் தாமிரபரணிக்கு சிறப்பு ஆரத்தி
Published on

நெல்லையில் தாமிரபரணி புஷ்கரணி பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாமிரபரணி நதி பிறந்த நாளாக கருதப்படும் வைகாசி மாதம் பவுர்ணமி நாளையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நெல்லை கருப்பந்துறை அக்னி தீர்த்த கட்டத்தில் மேலப்பாளையம் மண்டல இந்து முன்னணி சார்பில் சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்து முன்னணி மண்டல தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜசெல்வம், செயலாளர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் குற்றாலநாதன், மேலப்பாளையம் மண்டல பா.ஜனதா தலைவர் செல்வக்குமார், கருப்பந்துறை மாரியப்பன் மற்றும் சிவனடியார்கள் பலர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com