

பராபவ ஆண்டு, ஆனி-31 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை பிற்பகல் 2.24 வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : பூசம் நள்ளிரவு 1.03 வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சந்திர தரிசனம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தெப்போற்சவம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு.
விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம் வழிபாடு.
மேஷம் - உயர்வு
ரிஷபம் - கனிவு
மிதுனம் - பணிவு
கடகம் - பண்பு
சிம்மம் - பாசம்
கன்னி - உவகை
துலாம் - வெற்றி
விருச்சிகம் - செலவு
தனுசு - ஆதரவு
மகரம் - லாபம்
கும்பம் - திடம்
மீனம் - உண்மை