பக்தர் சுப்ரமணியன் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை வழங்கினார்.பூஜையின் போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதர்களால் அணிவிக்கப்பட்டது.
சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெற்றது.
இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர்.