ஒலியை விட வேகமாக பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த பாதுகாப்பு அமைப்புகள் தேவை: அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் விரைவாக வழங்கப்படுவதை, நட்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.
Zelensky urges Europe against hypersonic ballistic threat
Published on

ரஷியா தலைநகர் கீவ் மீது கண்டம்விட்டு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு ஏவி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல் குறித்து பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, "உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் விரைவாக வழங்கப்படுவதை, தங்களது நட்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு, தனது கையிருப்பில் உள்ள வெடிமருந்துகளில் கடுமையான பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

மேலும், கடந்த ஒரு மாதமாக, ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் பயணிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதனால் பெருமளவில் சுட்டு வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிரி நாடுகளின் ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை, உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்க முடிந்தாலும், பாலிஸ்டிக் ஏவுகனைகளே மிகவும் ஆபத்தான அச்சுறுத்தலாக நீடித்து வருகிறது.

இந்த வகையான பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுப்பதற்கு, உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பிற்கு இடைமறிப்பு ஏவுகணைகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.

உக்ரைன் மீதான இந்த தொடர்சியான தாக்குதல்கள், சமீப காலமாக ஐரோப்பிய தலைவர்களுக்கு, ஜெலன்ஸ்கி வழங்கி வரும் செய்தியை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “உக்ரைனின் போர் நடவடிக்கை முயற்சிகளில், புதிய மாற்றங்களை நான் தயார் செய்து வருகிறேன்.

ஆயுத விநியோகம் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய, நமது கூட்டாளிகளுடன் ஒரு புதிய அளவிலான ஒத்துழைப்பு நமக்கு தேவைப்படுகிறது.

ஐரோப்பாவிற்கு மலிவு விலையில், பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் தேவைப்படுகிறது.

மேலும் ஐரோப்பிய நாடுகள் தங்களது சொந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகளின் உற்பத்தியை விரைவாக விரிவுபடுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com