

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மிக நெருங்கிய ஆதரவாளரும், குடியரசுக் கட்சியின் மூத்த செனட்டருமான லிண்ட்சே கிரஹாம் வாஷிங்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். உக்ரைன் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுவிட்டு கடந்த சனிக்கிழமை திரும்பிய நிலையில் இரவு இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை அவரது அலுவலகம் அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவலை வெளியிட்டது.
கிரஹாமின் திடீர் மறைவு குறித்து மருத்துவப் பரிசோதகரின் முதற்கட்ட அறிக்கையின்படி, மரணத்திற்கு இதயத்தின் முக்கிய தமனியான பெருநாடியில் ஏற்பட்ட வெடிப்பு தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மிக நெருங்கிய நண்பரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
"நான் அறிந்த மிகச் சிறந்த மனிதர்களில் மற்றும் செனட்டர்களில் சிறந்தவரான லிண்ட்சே கிரஹாம் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவர் எப்போதும் நாட்டின் நலனுக்காக உழைத்த ஒரு உண்மையான அமெரிக்க தேசபக்தர்" என கூறியுள்ளார்.
கிரஹாமின் மறைவையொட்டி அமெரிக்கா முழுவதும் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய உலகத் தலைவர்களும், கிரஹாம் தங்களது நாடுகளுக்குச் செய்த பெரும் ஆதரவை நினைவு கூர்ந்து தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் விமானப்படை வழக்கறிஞரான லிண்ட்சே கிரஹாம், அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளில் மிக முக்கியப் பங்காற்றினார். ஆரம்ப காலங்களில் டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்து வந்தாலும், பின்னாட்களில் டிரம்பின் மிக முக்கியமான அரசியல் ஆலோசகராகவும், பாராளுமன்றத்தில் அவரது கொள்கைகளைத் தீவிரமாக ஆதரிக்கும் தூணாகவும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.