சிங்கப்பூர் பிரதமர் ராஜினாமா

நாட்டின் 3-வது பிரதமரான லீ சியென் லூங் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் என லீ சியென் லூங் கூறி உள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் ராஜினாமா
Published on

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 3-வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபகாலமாக இந்த கட்சியின் மந்திரி மற்றும் எம்.பி.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதன்காரணமாக 2 எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்தநிலையில் பிரதமர் லீ சியென்னும் அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தான் பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் கூறி உள்ளார்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் `எந்தவொரு நாட்டுக்கும் தலைமை மாற்றம் ஒரு முக்கியமான தருணம்' என அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com