

கத்தார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
பயணத்தின்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கத்தார் கடல் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் மொத்தம் 7 பேர் இருந்த நிலையில் 6 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கான மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.