Iran war | இருமடங்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: பிலிப்பைன்சில் அவசர நிலை அறிவிப்பு!

எரிபொருள் தட்டுப்பாட்டால் பிலிப்பைன்ஸ் அரசு உலகின் முதல் நாடாக அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.
Philippines declares energy emergency over Iran conflict
Philippines declares energy emergency over Iran conflict
Published on

ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதும், ஈரான் தன் பங்கிற்கு இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதால் மேற்காசிய நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் பிலிப்பைன்ஸ் அரசு உலகின் முதல் நாடாக அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.

பிலிப்பைன்ஸ் 98% கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே வாங்குவதால் அந்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை அந்நாட்டில் இருமடங்கு அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com