நேபாள அதிபருக்கு உடல்நலக்குறைவு- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது.ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நேபாள அதிபருக்கு உடல்நலக்குறைவு- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
Published on

காத்மாண்டு:

நேபாள அதிபர் ராம்சந்திர பவுதல் (வயது 78) கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 1ம் தேதி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து காத்மாண்டுவில் உள்ள டியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் அவரது மகன் சிந்தன் பவுதல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com