ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கில் முகமூடி அணிந்து வந்தவர் யார்? சர்ச்சைக்கு விளக்கம்

மொஜ்தபா கமேனி அடுத்து ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதால், அவர் முகமூடி அணிந்து வந்திருப்பதாக யூகங்கள் வெளியானது.
Masked Man at Khamenei Funeral
Published on

ஈரானில் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்து மர்மமான முறையில் ஒரு நபர் கலந்துகொண்டது ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டார்.

இதற்கான இறுதி அஞ்சலி பிரார்த்தனையின்போது, கருப்பு முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்த ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.

இதையடுத்து தாக்குதலில் கொல்லப்பட்ட கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி அடுத்து ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதால், அவர் முகமூடி அணிந்து வந்திருப்பதாக யூகங்கள் வெளியானது.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், அலி கமேனியின் மூத்த மகனான மொஜ்தபா கமேனியின் மகன் முகமது ஜாவத் என்பவர் தான் முகமூடி அணிந்திருந்ததாக கூறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து பிப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலில், ஜாவத் முகத்தில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதன் காரணமாகவே, அவர் தனது முகத்தை மூடியதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தின்போது மொஜ்தபா தனது தந்தையுடன், இல்லத்தின் வேறு அறையில் இருந்து உயிர் தப்பியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அவரின் முகம், கால்கள், கை மற்றும் தோள்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com