வெனிசுலாவை சீர்குலைத்த நிலையில் நிலையில், பிலிப்பைன்சில் 6.7 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்..!

3 வாரங்களுக்கு முன்னதாக கடும் நிலநடுக்கும் ஏற்பட்டு, 80 பேர் உயிரிழந்த நிலையில், பிலிப்பைன்சில் உள்ள தீவில் இன்றும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ்
Published on

தென்அமெரிக்கா நாடான வெனிசுலாவில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகளில் இடைவெளியில் அடுத்தடுத்து கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். பலமாடி குடியிருப்புகள் இடிந்துள்ளதால், மீட்புப்பணி கடும் சவாலாக உள்ளது.

6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்த நிலையில் பிலிப்பைன்சில் 6.7 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 80 பேர் உயிரிழந்துள்ளர். இந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவிலலை.

உள்ளூர் நேரப்படி இரவு 7.42 மணிக்கு இந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. மிண்டானயோ தீவின் சாரங்கனி நகருக்கு தெற்மேற்கே 21 கி.மீ. தொலைவிலும், 65.7 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com