அடுத்த இலக்கு அங்கேதான்: UAE துறைமுக பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற ஈரான் எச்சரிக்கை

அடுத்த இலக்கு அங்கேதான்: UAE துறைமுக பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற ஈரான் எச்சரிக்கை
Published on
Summary

UAE துறைமுகங்களை தாக்குவதற்கு எங்களுக்க நியாயமான காரணங்கள் இருப்பதால், அப்பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் இன்று 15-வது நாளாக நீடித்து வருகிறது. இன்று ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய பகுதியாக இருக்கும் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் கடுங்கோபம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள துறைமுகங்களை தாக்க எங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மறைவில் அமெரிக்கா பயன்படுத்துகிறது. அதன்மீது தாக்குதல் நடத்துவோம். இதனால் உடனடியாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

துபாயின் ஜெபெல் அலி துறைமுகம், அபு தாபியின் காலிபா துறைமுகம் மற்றும் புஜைரா துறைமுகம் ஆகியவற்றின் அருகில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை வடுத்துள்ளது.

பொதுமக்கள் சார்ந்த கட்டமைப்புகளுக்கு இடையே அமெரிக்க ராணுவப் படைகள் நிலை கொண்டிருப்பதாலும், அங்கு மறைந்திருப்பதாலும், இப்பகுதிகள் நியாயமான இலக்குகளாக மாறியுள்ளன வரும் மணிநேரங்களில் இவை இலக்கு வைக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com