ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த சபஹார் துறைமுக நகரம் மீது அமெரிக்கா சரமாரி தாக்குதல்!

90 ஈரானிய டார்கெட்களை தாக்கியதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை பிரிவான சென்ட்காம் தெரிவித்துள்ளது.
சபஹார் துறைமுகம்
சபஹார் துறைமுகம்
Published on

உடன்பாட்டை மீறி ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்களை தாக்கியதால் ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்து ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று ஈரானின் 80க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இன்னும் தாக்குதல்கள் தீவிரமடையும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.

சபஹார் தாக்குதல்

இந்நிலையில் ஈரானின் தென்கிழக்கு துறைமுக நகரமான சபஹார் மீது இன்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

சபஹார் முழுவதும் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது . அவசர உதவிக்குளுக்குள் அங்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் முதல் முறை தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், இந்த முக்கியத்துவம் வாய்ந்த சபஹார் துறைமுகம் அமைந்திருக்கும் சபஹார் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்தியின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த சபஹார் துறைமுகம் பந்தர் அபபாஸ் துறைமுகத்துக்கு அடுத்து ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் ஆகும்.

அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூற்றுப்படி, ஹார்முஸ் ஜலசந்தியின் வர்த்தக கப்பல்களை ஈரான் அச்சறுத்த ஏதுவாக இங்கு அமைந்துள்ள ஈரானின் கடல்சார் கட்டமைப்புகள் மற்றும் ராணுவ வசதிகள் இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் 90 ஈரானிய டார்கெட்களை தாக்கியதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை பிரிவான சென்ட்காம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்தாக இருக்கும் இலக்குகளை செயலிழக்க செய்ய கூடுதல் தாக்குதல் நடத்தப்படும் என சென்ட்காம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

முதற்கட்ட தவலின்படி, இந்த தாக்குதலில் சபாஹர் துறைமுகத்தின் உள்ள கப்பல் நிறுத்துமிடங்கள், கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு கோபுரம், அருகில் உள்ள ராணுவ சொத்துகள் மட்டுமே தாக்கப்பட்டது என்றும் மக்கள் பயன்படுத்தும் துறைமுக பகுதி மற்றும் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டதாவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற மூன்று சரக்கு கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே குவைத், பஹ்ரானில் உள்ள அமெரிக்க தளங்களை இன்று இரண்டாவது நாளாக தாக்க உள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.

இதனால் இருநாடுகளுக்கு இடையேயான அமைதி முயற்சி முற்றிலும் சீர்குலைந்து மீண்டும் போர் மூண்டுள்ளது.

சதி

இதனிடையே ஈரான் தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டு வருவதாகவும், அவர்களின் ஹிட் லிஸ்டில் தனது பெயர் முதன்மையாக உள்ளதாகவும் டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இதுவரை நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்திருக்கலாம், ஆனால் அது எப்போதும் நீடிக்காது" என கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com