அமெரிக்க கடற்படை மாணவர்களை வழிநடத்தும் 17 வயது ராஜஸ்தான் மாணவி

அமெரிக்காவில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியில் பட்டாலியன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
Indian-origin teen leads US Navy JROTC battalion
Published on

அமெரிக்க பட்டாலியன் கட்டளை அதிகாரியாக ரித்தி செளஹான் நியமனம்:

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 17 வயது மாணவியான ரித்தி செளஹான், அமெரிக்காவில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியில் பட்டாலியன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை பூர்வீகமாக கொண்டவரான ரித்தி செளஹான், நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் உள்ள பெஞ்சமின் கார்டோசோ உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்.

இவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கல்விப் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு தனது பள்ளியை தகுதிபெற உதவினார்.

மேலும் ஒரு தேசிய கல்வித் தேர்வு பிரிவில் முதலிடம் பெறுவதற்கும் அவர் பங்களித்தார். அத்துடன் படைப்பிரிவின் முதல் சீபெர்ச் நீருக்கடியில் இயங்கும் ரோபோவின் உருவாக்கத்திற்கும் அவர் தலைமை தாங்கினார்.

காலை 7 மணிக்கு வகுப்பு தொடங்குவதற்கு முன்பு பள்ளிக்கு வந்து, படைப்பிரிவின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகித்து, பயிற்சி அமர்வுகளை மேற்பார்வையிட்டு, இளநிலை மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கி வருகிறார்.

இந்நிலையில் ரித்தி செளஹான், சுமார் 300 மாணவர்களுக்கு பயிற்சியை வழங்கும் கடற்படை இளநிலை அதிகாரிகள் பயிற்சி படைப்பிரிவின் பட்டாலியன் கட்டளை அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தலைமை என்பது மற்றவர்களுக்கு சேவை செய்வதும், முன்மாதிரியாக திகழ்வதும் தான்.

மஹந்த் சுவாமி மஹாராஜ் போதித்த பணிவு, கருணை மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவையும், BAPS சுவாமிநாராயணன் சன்ஸ்தாவுடனான ஈடுபாடும், எனது தலைமை பாணியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com