கத்தாரின் முன்னாள் அமீர் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்!

தந்தை அமீரின் மறைவை ஒட்டி, கத்தார் அரசு 4 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது.
கத்தாரின் முன்னாள் அமீர் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்!
Published on

கத்தார் நாட்டின் முன்னாள் அரசரும், 'தந்தை அமீர்' என்று அழைக்கப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி (74) இன்று காலை காலமானதாக அமீரி திவான் தெரிவித்துள்ளது.

இவரது மறைவை ஒட்டி, கத்தார் அரசு 4 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது. அரசு அலுவலகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

1995 முதல் 2013 வரை கத்தாரை ஆண்ட ஷேக் ஹமத், வளைகுடா நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். கத்தாரின் இயற்கை எரிவாயு வளங்களை மேம்படுத்தி, அதில் முதலீடு செய்து அந்நாட்டின் தனிநபவர் வருமானத்தை உயர்த்தியவர்.

தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் கத்தார் தற்போது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக வரிசைப்படுத்தப்படுகிறது.

உலகின் முக்கிய ஊடகங்களில் ஒன்றான அல் ஜசீரா தொலைக்காட்சியைத் தொடங்கியவர். 2022-ல் பிஃபா கால்பந்து உலகக்கோப்பையை நடத்தினார். 2004-ல் இவரது ஆட்சிக்காலத்தில்தான் கத்தாரில் நிரந்தர அரசியலைப்பு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அத்துடன் நகராட்சி தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பெண்கள் வாக்களிக்கவும், வேட்பாளர்களாக போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டனர். வளைகுடா நாடுகளின் பாரம்பரிய வழக்கங்களை உடைத்து, 2013-ல் தன்னிச்சையாகத் தனது மகனும் தற்போதைய அமீருமான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்.

ஷேக் ஹமத்தின் மறைவுக்குப் பல்வேறு உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவை ஒட்டி, கத்தார் அரசு 4 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது. இதனையொட்டி அரசு அலுவலகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com