கணினிகளில் மட்டும் முடங்கிய ஃபேஸ்புக் - பயனர்கள் அவதி!

உலகம் முழுவதும் கணினிகளில் (டெஸ்க்டாப் பிரவுஸர்களில்) ஃபேஸ்புக் தளம் திடீர் தொழில்நுட்பக் கோளாறால் முடங்கியுள்ளது.
கணினிகளில் மட்டும் முடங்கிய ஃபேஸ்புக் - பயனர்கள் அவதி!
Published on

ஃபேஸ்புக்கின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப (site issue) காரணமாக, காலையில் இருந்து பயனர்கள் கணினியில் செயலியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா, மால்டா உள்பட உலக நாடுகளில் உள்ள அனைத்துப் பயனர்களும் செயலியை அணுகும்போது ‘கணக்கு தற்போது பயன்பாட்டில் இல்லை’ (account is currently unavailable) என்ற வாசகம் வருகிறது.

இந்த தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முடக்கம் கணினிகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. மொபைல் ஃபோன்களில் வழக்கம்போல ஃபேஸ்புக் செயல்பாட்டில் உள்ளது.

உலகளவில் ஃபேஸ்புக்கிற்கு 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கின்றனர். இதில் சுமார் 1.5% முதல் 2% பேர் டெஸ்க்டாப் வழியாக தளத்தை அணுகுகின்றனர்.

அதே சமயம் ஏறத்தாழ 14.3% பேர் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் இரண்டையும் பயன்படுத்துகின்றனர். 81% க்கும் அதிகமானோர் மொபைல் ஃபோன்களில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com