காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

246 பேருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.
காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு
Published on

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கொடிய 'எபோலா' வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. அங்குள்ள இதூரி மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகப் பரவி வரும் இந்த எபோலா வைரஸ் நோய்க்கு, இதுவரை ஒட்டுமொத்தமாக 65 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 246 பேருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். தற்போது மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குத லுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com