‘எதிரிக் கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸைக் கடந்து செல்லலாம்’ - ஈரான்

அமெரிக்கா, இஸ்ரேலை தவிர மற்ற அனைத்துக் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லலாம் என ஈரான் அறிவித்துள்ளது.
‘எதிரிக் கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸைக் கடந்து செல்லலாம்’ - ஈரான்
Published on

‘ஈரான் அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்கவேண்டும்’ என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களை தவிர மற்ற அனைத்துக் கப்பல்களுக்கும் அந்த நீர்வழி திறந்தே இருக்கும் என தெஹ்ரான் தெரிவித்துள்ளது.

"ஈரானின் எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள், தெஹ்ரானுடன் (ஈரான் அரசுடன்) பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஜலசந்தியைக் கடந்து செல்லலாம்” என சர்வதேச கடல்சார் அமைப்பிற்கான ஈரானியப் பிரதிநிதி அலி மூசாவி தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், வளைகுடாவில் மாலுமிகளைப் பாதுகாக்கவும் ஐ.நா. அமைப்புடன் ஒத்துழைக்க தெஹ்ரான் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் "தற்போதைய சூழ்நிலைக்கு" ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களே காரணம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் "ராஜதந்திரமே ஈரானின் முன்னுரிமையாகத் தொடர்கிறது. இருப்பினும், ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்படுவதும், பரஸ்பர நம்பிக்கையும், உறுதியும்தான் அதைவிட முக்கியமானவை” என்றும் கூறினார்.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கிய எரிசக்தி விநியோகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை, 'ஒரு லிட்டர் எண்ணெய் கூட' அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் கூட்டாளிகளைச் சென்றடைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, ஈரான் பிப்ரவரி 28 அன்று மூடியது.

இதனால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது.

மறுபுறம் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட நேட்டோ நாடுகள் மறுத்தநிலையிலும், ஹார்முஸ் ஜலசந்தியில் வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க, ஒரு கடற்படை கூட்டணியை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com