சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்

ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகினர்.சிறை காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.
சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்
Published on

கின்சாசா:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.

இதற்கிடையே கடந்த வாரம் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகினர்.

இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது சிறை காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த கைதிகள் அனைவரும் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதில் சுமார் 6 ஆயிரம் கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com