இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 சிரியா வீரர்கள் உயிரிழப்பு

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சிரியாவின் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
வான்வழி தாக்குதல்
வான்வழி தாக்குதல்
Published on

டமாஸ்கஸ்:

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

சிரியாவின் சனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், எதிரி நாடான இஸ்ரேல் வான்வழியே நடத்திய ஏவுகணை தாக்குதல் டமாஸ்கஸ் நகரில் சில பகுதிகளை இலக்காக கொண்டிருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் வான்வழி நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொருட்களும் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com