

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மாலைமலர் தரப்பில் மக்களிடையே தேர்தல் தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கேட்பில் அங்கு அதிமுகவிற்கே அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாவது திமுக உள்ளது. விஜய்யின் தவெக மூன்றாம் இடத்தில் உள்ளது.
இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளார். தற்போதும் இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். திமுக சார்பில் கே.கே. செல்லபாண்டியன் களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று தேர்தல்களாகவும் இந்தத் தொகுதி அதிமுக கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
இதனால் 2026 தேர்தலில் விராலிமலை தொகுதி அதிமுக தக்கவைக்குமா, அல்லது திமுக கைப்பற்றுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
மக்களின் கருத்துப்படி அதிமுக முதலிடத்தில் இருந்தாலும், திமுகவிற்கான ஆதரவும் குறைவாக உள்ளது என்று சொல்லமுடியாது.
மேலும் இந்த கருத்துகள் குறைந்த அளவிலான மக்களிடம் மட்டுமே கேட்கப்பட்டுள்ளதால், தேர்தல் முடிவுகள் மாறுபடலாம்.
தற்போதைய வாக்காளர் பட்டியலின்படி, இத்தொகுதியில் மொத்தம் 2,23,084 வாக்காளர்கள் உள்ளனர்.