புதிய முகத்திற்குதான் வாய்ப்பு... பெரம்பூரின் கள நிலவரம்... மக்கள் கூறுவது என்ன?

பெரம்பூரின் ஜமாலியா பகுதியில் தவெகவிற்கு அதிக ஆதரவு உள்ளது.
புதிய முகத்திற்குதான் வாய்ப்பு... பெரம்பூரின் கள நிலவரம்... மக்கள் கூறுவது என்ன?
Published on

தமிழ்நாட்டில் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக, கடந்த 2021 சட்டசபை தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தல்களில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் வலுவான நிலையில் உள்ளது.

மறுபுறம் அதிக முறை ஆட்சி செய்த மற்றும் தற்போது ஆட்சியை பிடிப்போம் என்று அதிமுக தன்னை முன்னிறுத்தி வருகிறது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி, வரும் 2026 தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் தனது வாக்கு வங்கியை உயர்த்தப் பல்வேறு முயற்சிகளை பாஜக எடுத்து வருகிறது.

இச்சூழலில் இத்தேர்தலில் யார்மீண்டும் ஆட்சிக்கு வருவார், விஜய்யின் தவெக எத்தனை இடங்களை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக மக்களிடையே மாலைமலர் தரப்பில் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பூரின் ஜமாலியா பகுதியில் எடுத்த ஒரு கருத்துக்கேட்பில் அப்பகுதியில் விஜய்க்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் திமுக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com