

அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி.
* சுனாமினா சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு. தமிழ்நாட்டின் நலன்களை பாதிச்சிருக்க சுனாமி பேரழிவு இது.
* தமிழ்நாட்டு மக்களை இதுல இருந்து, எப்படி மீட்டெடுக்க போறோம். அதை பத்தி யோசிங்க.
* தோல்வியின்போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான். ஆனால் அது பழியாக இருக்கக்கூடாது.
* மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கல. அதுக்காக, மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்னு ஆகிட கூடாது. எல்லாருமே முக்கியம்தான். ஒரு கட்டடத்துக்கு எல்லாத் தூணும் முக்கியம்.
* நம்மை பொறுத்தவரை, சட்டமன்றத்துல முறையான - திறமையான - கட்சியா நாம செயல்படணும்.
* நம்ம அரசியல் எப்படி இருக்கணும்னா, கடந்த ஐந்தாண்டுகள்ல நாம உருவாக்குன திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து செயல்பட வைக்கணும்.
* நமக்குள்ளயே ஒற்றுமை இல்லனா - வெற்றி என்பது சாத்தியம் இல்ல.
* என்னைப் பொறுத்தவரையில அடிமட்டத் தொண்டர்கள் - அடிமட்ட நிர்வாகிகள் - முழுப்பங்களிப்பைத் தரும் வகையில் நாம அவங்களை தயார் செய்யணும்.
இவ்வாறு அவர் கூறினார்.