

மதுரை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தன் உறவினர்கள் நால்வருடன் திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலிலுக்கு சென்றுவிட்டு இன்று மாலை மதுரை திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கார், மதுரை மாவட்டம் மேலூர் அருகே அய்யப்பட்டி விளக்கு பகுதி அருகே 4 வழிச்சாலையில் வந்துகொண்டிருந்தபோது பக்கவாட்டு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காரில் பயணித்த ரமேஷ் உள்ளிட்ட இரு ஆண்களும், 3 பெண்களும் என 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழநதனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.