30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்!
Published on

சாகித்திய அகாதெமி விருது பெற்ற புகழ்பெற்ற கரிசல் இலக்கிய எழுத்தாளர் பூமணியின் (79) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல்நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமான நிலையில், அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது இறுதி சடங்குகளுக்கு பின்னர் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ் இலக்கிய உலகில் பெரும் தடம் பதித்த இவரது 'வெக்கை', 'பிறகு', 'வாய்க்கால் வரப்புகள்', மற்றும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற 'அஞ்ஞாடி' ஆகிய நாவல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இவர் 1997-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற 'கருவேலம் பூக்கள்' என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com