TN Election 2026 | அரும்பாக்கத்தில் ஆளும் கட்சிக்கு பெருகும் ஆதரவு: மக்கள் யார் பக்கம்?

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் விஜய் கட்சியின் மீதே பலரது கவனமும் இருக்கிறது.
TN Election 2026 | அரும்பாக்கத்தில் ஆளும் கட்சிக்கு பெருகும் ஆதரவு: மக்கள் யார் பக்கம்?
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.

இந்நிலையில், சட்டசபைத் தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய அரும்பாக்கம் பகுதியில் vox pops நடத்தினோம். இதில், கிட்டத்தட்ட திமுகவும், தவெகவும் அதிகளவில் ஆதரவு பெற்றுள்ளன.

அதன்படி, அரும்பாக்கத்தில் 50 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக தி.மு.க.விற்கு 18 பேரும், தவெ.க.விற்கு 14 பேரும் வாக்களிப்போம் என தெரிவித்தனர்.

அ.தி.மு.க.விற்கு 10 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 4 பேரும், மற்றவர்களுக்கு ஒருவரும் வாக்களிப்பதாக தெரிவித்தனர்.

ஆனாலும், மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மை என்பது மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் மட்டுமே தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com