நீட் ரகசியம் என்ன? - உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

ஓடி ஓடி போட்டோ ஷூட் எடுப்பவர் கொரோனா காலத்தில் எங்கு போனார் என்பதை தான் அவ்வாறு கூறினேன்.
நீட் ரகசியம் என்ன? - உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
Published on

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* நீட் விலக்கு ரகசியத்தை வெளியில் கூறினால் 'ராஜா காது கழுதை காது கதை' போல் ஆகிவிடுவோம் என உதயநிதி பயப்படுகிறாரோ?

* நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான ரகசியம் என்ன?

* நீட் விவகாரத்தில் தவறு செய்தது காங்கிரசும் திமுகவும். ஆனால் நம் மீது பழி போடுகிறார்கள், இதை எப்படி ஏற்பது?

* உதயநிதி ஸ்டாலினை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்களுக்கு ஏதாவது செய்தாரா?

* சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை உதயநிதி நிறைவேற்றவில்லை.

* கொரோனாவில் ஸ்டாலினை எங்கும் காணவில்லை என்பதால் அவரை காணாமல் போனவர் என்றேன்.

* ஸ்டாலினை காணாமல் போனவர் என்று மட்டும் தான் சொன்னேனே தவிர உங்களை பற்றி தவறாக பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.

* நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை.

* ஓடி ஓடி போட்டோ ஷூட் எடுப்பவர் கொரோனா காலத்தில் எங்கு போனார் என்பதை தான் அவ்வாறு கூறினேன்.

* முதல்வரும் துணை முதல்வரும் என்னை பற்றி அவதூறாக பேசினால் உடனுக்குடன் தக்க பதிலடி தருவேன்.

கொரோனாவில் முதல்வர் போய் சேர்ந்து இருப்பார் என இபிஎஸ் பேசியது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com