

அண்ணாமலையின் "வீ த லீடர்ஸ்" அமைப்பின் சார்பில் திருச்செந்தூரில் நடைபெறவிருந்த 2வது பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக, வரும் ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த பிரம்மாண்டமான சமூக நல நிகழ்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீ தி லீடர்ஸ் (We The Leaders) என்பது தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை அவர்களால் கடந்த ஜூன் தொடங்கப்பட்ட ஒரு புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கமாகும். சாதி, வாரிசு அரசியலைத் தாண்டி, மக்கள் மையமான மற்றும் தரவு சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை தமிழக அரசியல் போக்கு குறித்த தனது கருத்து வேறுபாடுகள் காரணமாக பாஜகவில் இருந்து விலகி, இந்த புதிய அரசியல் இயக்கத்தைத் தனியாகத் தொடங்கினார்.
அண்ணாமலை தொடங்கியுள்ள வி த லீடர்ஸ் இயக்கத்தில் தற்போது வரை சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இந்த இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 12ம் தேதி அன்று பொள்ளாச்சியில் கலை நிகழ்ச்சிகளுடன் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் நடைபெற்றது. மாநாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அங்கு பேசிய அண்ணாமலை,"இளைஞர்களின் குரல்களை நாம் கேட்கவேண்டும். இவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இவர்கள் 2026-ல் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 2031-ல் மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத்தான் போகிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
இந்நிலையில், அண்ணாமலையின் "வீ த லீடர்ஸ்" அமைப்பின் சார்பில் திருச்செந்தூரில் நடைபெறவிருந்த 2வது பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக, வரும் ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த பிரம்மாண்டமான சமூக நல நிகழ்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.