விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை- அமித்ஷாவுக்கு த.வெ.க.கடிதம்

கொளத்தூரில் விஜய் பிரசாரம் செய்தபோது போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை- அமித்ஷாவுக்கு த.வெ.க.கடிதம்
Published on

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது த.வெ.க. தலைவர் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுதுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் உள்ள விஜய்க்கு பிரசாரத்தின்போது உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை. கடந்த 30-ந்தேதி பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரசாரம் செய்தபோது போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் தவெக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா புகார் மனு அளித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com