எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகம் சந்திப்பு

வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகம் சந்திப்பு
Published on

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. திடீரென இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

த.வெ.க.விற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க. தரப்பிலும் குரல் எழுந்துள்ளது.

இதற்கிடையே, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள சி.வி. சண்முகத்தின் உறவினர் வீட்டில் இன்று காலை தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ., பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com