வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரெயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி.
PM Modi
Published on

சென்னை வடபழனி- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரெயில் சேவை ஜூலை மாதத்தில் தொடங்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் இயக்க ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து 4 மாதங்கள் கடந்த நிலையில், எப்போது முதல் தொடங்கும் என்கிற கேள்வி எழுந்தது.

வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுமார் 15 கி.மீ தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்.

பூந்தமல்லி பைபாஸ் முதல் போரூர் சந்திப்பு வரை 10 நிலையங்களில் மெட்ரோ ரெயில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com