தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு ‘Out of Control’ - உதயநிதி

தொகுதி மக்களின் நன்மைக்காக, திராவிட மாடல் அரசு செயல்படுத்தி இருக்கும் திட்டங்களையும் சாதனைகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லி பிரசாரம் செய்கிறோம்.
தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு ‘Out of Control’  - உதயநிதி
Published on

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேஷை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி நிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தி.மு.க. ஆட்சியில் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டு பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், சங்கி கூட்டத்திற்கு அஞ்சி தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் மோடியின் நம்பர் 1 முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

தொகுதி மக்களின் நன்மைக்காக, திராவிட மாடல் அரசு செயல்படுத்தி இருக்கும் திட்டங்களையும் சாதனைகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லி பிரசாரம் செய்கிறோம்.

தன்மானத் தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு ‘Out of Control’ என்ற நிலையை உருவாக்க அயராது உழைப்போம்! என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com