த.வெ.க.-வின் "டேக் டைவர்ஷன் டெக்னிக்" மக்களுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது..!- மு.க.ஸ்டாலின்

தவெகவிற்கு ஓட்டு போட்டவர்களும், போடாதவர்களும் கஷ்டப்படுகின்றனர்.
EX CM MK Stalin
Published on

சென்னை வானகரத்தில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மின்வெட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஆளும் அரசோ டேக் டைவர்ஷன் அரசாக உள்ளது.

இவர்களின் டேக் டைவர்ஷன் டெக்னிக் மக்களுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. திமுக பார்த்து பார்த்து வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை சீரழிய விடக்கூடாது.

தவெகவிற்கு ஓட்டு போட்டவர்களும், போடாதவர்களும் கஷ்டப்படுகின்றனர். கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

திமுக போல் வெற்றி பெற்ற கட்சியும் இல்லை தோல்வியடைந்த கட்சியும் இல்லை, லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் இதயத்தில் திமுக உள்ளது.

தமிழ்நாட்டை பார்த்துதான் காலை உணவுத்திட்டத்தை 2 மாநிலங்களில் தொடங்கி உள்ளனர்.

திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என வாக்களித்தவர்கள் ஆதரவில் தான் தவெக வண்டி ஓடுகிறது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை, ஆனால் தவெக 108 இடங்களில் தான் வெற்றி பெற்றார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com