த.வெ.க. அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்- நம்பிக்கை வாக்கெடுப்பில் வன்னிஅரசு பேச்சு

மாநில உரிமையை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது.
த.வெ.க. அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்- நம்பிக்கை வாக்கெடுப்பில் வன்னிஅரசு பேச்சு
Published on

விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்றக்குழு தலைவர் வன்னிஅரசு ஆதரவு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வன்னிஅரசு பேசியதாவது:-

* வாக்கெடுப்பில் வென்று த.வெ.க. அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்.

* மிகச்சிறந்த அரசு என்ற பெயர் பெற்று த.வெ.க. அரசு செயல்பட வேண்டும்.

* ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என அனைவருக்குமான அரசாக த.வெ.க. அரசு இருக்கும் என்பதை முதலமைச்சர் விஜய் நிரூபித்துள்ளார்.

* எதிர்கட்சியினரை முதலமைச்சர் விஜய் சந்தித்தது இந்தியாவுக்கே முன்னுதாரணம்.

* த.வெ.க. அரசு மாநில உரிமைகளை பாதுகாக்க என்றும் குரல் கொடுக்க வேண்டும்.

* மாநில உரிமையை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது.

* ஆணவப்படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

* இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தடுக்கப்படவேண்டும் என்று வலியுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com