நம்பிக்கை வாக்கெடுப்பு: த.வெ.க. அரசுக்கு CPM, VCK ஆதரவு

மார்க்சிஸ்ட் கட்சியை தொடர்ந்து த.வெ.க. அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு
நம்பிக்கை வாக்கெடுப்பு: த.வெ.க. அரசுக்கு CPM, VCK ஆதரவு
Published on

நம்பிக்கை குரல் வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில் மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் ஆதரவை தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக்கழக அரசுக்கு சி.பி.எம். கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் சி.பி.எம். சட்டமன்றக்குழு தலைவர் செல்லசுவாமி தெரிவித்துள்ளார். மேலும் செல்லசுவாமி கூறுகையில்,"த.வெ.க. தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களுக்காக திறம்பட செயல்பட வேண்டும்" என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சியை தொடர்ந்து த.வெ.க. அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் விசிக சட்டமன்றக்குழு தலைவர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.

இதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் 5, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலாக 2 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 9 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com