நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Published on

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை காலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அ.தி.மு.க. இரண்டு பிரிவாக செயல்பட தொடங்கி உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு பிரிவினரும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு பிரிவினரும் என செயல்படுகின்றனர். இதனை தொடர்ந்து சட்டசபையில் கொறடா நியமிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் த.வெ.க. அரசுக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பில் 25 பேர் ஆதரவு அளித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 பேர் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நாளை காலை 9 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com