

தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் எனஅறிவித்தார். அதனால் 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. பழைய மாதிரி 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும்.
விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபின், தற்போது வீட்டு நுகர்வோர் மின்சார கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டு நுகர்வோருக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் மீட்டர் கோளாறு காரணமாக கூடுதல் கட்டணத்தை காண்பித்ததாக கூறப்படுகிறது. பொதுவாக பொதுமக்களுக்கு கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது.
தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதாவும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இவரைத் தவிர்த்து திமுக முன்னாள் அமைச்சரான கீதா ஜீவனும் சத்தமில்லாமல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆட்சி மற்றும் தற்போதைய ஆட்சியில் எவ்வாறு மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பார்ப்போம். கடந்த திமுக ஆட்சியில் அதாவது 2025-ல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.
அதன்படி ஒரு வீட்டு நுகர்வோர் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டாம். 200 யூனிட் பயன்படுத்தினால் 101 முதல் 200 யூனிட்களுக்கு, ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் என்ற வகையில் 235 ரூபாய் செலுத்த வேண்டும்.
300 யூனிட் பயன்படுத்தப்பட்டதாக வைத்துக் கொள்வோம். இந்த நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் இலவசம். அடுத்த 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய் வசூலிக்கப்படும். நீங்கள் அடுத்த 1 யூனிட் (அதாவது 201) பயன்படுத்தினாலும், 400 யூனிட் பயன்படுத்தினாலும் ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் 470 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்படி ஒரு நுகர்வோர் 300 யூனிட் பயன்படுத்தினால் 705 ரூபாய் கட்டணம் (201 முதல் 300 யூனிட்டிற்கு 470 ரூபாய்) செலுத்த வேண்டும்.
400 யூனிட் பயன்படுத்தினாலும் 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அதன்படி முதல் 100 யூனிட்கள் இலவசம். அதன்பின் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 940 என மொத்தமாக 1175 ரூபாய் வசூலிக்கப்படும்.
500 யூனிட் பயன்படுத்தினால் 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 ரூபாய் விதம் 630 ரூபாய் வசூலிக்கப்படும். 100 யூனிட் வரை இலவசம். 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 940 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தம் 1805 ரூபாய் வசூலிக்கப்படும்.
500-க்கு மேல் ஒரு யூனிட் பயன்படுத்தினாலும் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை 4.70 ரூபாய் (1410 ரூபாய்), 401 முதல் 500 யூனிட் வரை 6.30 ரூபாய் (630 ரூபாய்), 501 முதல் 600 யூனிட் வரை 8.40 ரூபாய் (840 ரூபாய்), 601 முதல் 800 யூனிட் வரை 9.45 ரூபாய் (1890 ரூபாய்), 801 முதல் 1000 யூனிட் வரை 10.50 ரூபாய் (2100 ரூபாய்) என வசூலிக்கப்படும்.
1000 யூனிட்டிற்கு மேல் வீட்டு நுகர் பயன்படுத்தினால், 1 யூனிட்டிற்கு 11.55 ரூபாய் வசூலிக்கப்படும். 1000-த்திற்கு உட்பட்ட யூனிட்களுக்கு மேற்பகுதியில் சொன்னவாரு வசூலிக்கப்படும்.
முதலமைச்சர் விஜய் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் மின்சார கட்டணம் தேவையில்லை என்கிறார். 500 யூனிட்டிற்கு மேல் 1 யூனிட் வசூலித்தாலும் பழைய முறைப்படை கணக்கிடப்படும். அப்படி என்றால், 201 முதல் 500 யூனிட் வரை எப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.
ஒரு வீட்டு நுகர்வோர் 201 யூனிட் பயன்படுத்தினார் என்றால், முதல் 200 யூனிட் இலவசம். அடுத்த யூனிட்டிற்கு 4.70 ரூபாய் வசூலிக்கப்படும்.
300 யூனிட் பயன்படுத்தினால் என்றால் 201 முதல் 300 வரை 100 யூனிட்டிற்கு ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 470 ரூபாய் வசூலிக்கப்படும்.
201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அப்படி பார்த்தால் 400 யூனிட்டிற்கு ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் 940 ரூபாய் வசூலிக்கப்படும். 420 யூனிட் பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை. 201 முதல் 400 யூனிட்டிற்கு 4.70 விதம் 940 ரூபாய், 401 முதல் 500 யூனிட்டிற்கு 6.30 யூனிட் விதம் 20 யூனிட்டிற்கு 126 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 1066 ரூபாய் வசூலிக்கப்படும்.
501 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 8.40 ரூபாய் என மொத்தம் 2048 ரூபாய் வசூலிக்கப்படும்.
601 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 1 யூனிட்டிற்கு 9.45 யூனிட் விதம் 9.45 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 601 யூனிட்டிற்கு 2889.45 ரூபாய் வசூலிக்கப்படும்.
801 யூனிட் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட் 10.50 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அதன்படி 1 யூனிட்டிற்கு 10.50 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 801 யூனிட்டிற்கு 4780 ரூபாய் வசூலிக்கப்படும்.
1001 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட் 10.50 ரூபாய் விதம் 2100 ரூபாய் வசூலிக்கப்படும். அடுத்த ஒரு யூனிட்டிற்கு 1000 யூனிட்டிற்கு மேல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் 11.55 ரூபாய் என்ற விதத்தில் 11.55 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 1001 யூனிட்டிற்கு 6881.55 ரூபாய் வசூலிக்கப்படும்.
இதனடிப்படையில் 2025-ல் 101 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் இல்லை. 2026-லும் அதுதான். 2025-ல் 201 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை. 101 முதல் 200-க்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 வரை 1 யூனிட் 4.70 ரூபாய் விதம்) 4.70 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்படி 201 யூனிட் பயன்படுத்தினால் 239.70 ரூபாய் செலுத்த வேண்டும்.
2026-ல் அதாவது தற்போது 200 வரை இலவசம். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 யூனிட் வரை 1 யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம்) 4.70 ரூபாய் செலுத்த வேண்டும்.
2025-ல் 300 யூனிட் பயன்படுத்தினால் 705 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது 470 ரூபாய் செலுத்த வேண்டும்.
2025-ல் 400 யூனிட் பயன்படுத்தினால் 1175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது 940 ரூபாய் செலுத்த வேண்டும்.
2025-ல் 500 யூனிட் பயன்படுத்தினால் 1805 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது 1507 ரூபாய் செலுத்த வேண்டும்.
2025-ல் 600 யூனிட் பயன்படுத்தினால் 2880 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போதும் 2880 ரூபாய் செலுத்த வேண்டும். 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால் இரண்டு காலத்திலும் ஒரு மாதிரியான கட்டணம்தான்.