

சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார். அவரது கட்சி வேட்பாளர்களும் பலர் தோல்வியடைந்தனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணி இந்த தேர்தலில் 73 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 108 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளதால் அவர் விரைவில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதையொட்டி முதலமைச்சர் பதவியை மு.க. ஸ்டாலின் இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கிண்டி கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளாவில் இருப்பதால் அவர் பார்வைக்கு மு.க.ஸ்டாலினின் ராஜினாமா கடிதம் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றார். புதிய அரசு பதவியேற்கும் வரை காபந்த் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் தொடர்வார்.