TN Election 2026 | 18 தொகுதிகளில் நேருக்குநேர் மோதும் அதிமுக- காங்கிரஸ்

அதிமுக உடன் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், தேமுதிக மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா 5 தொகுதிகளிலும் நேருக்குநேர் மோதுகின்றன.
TN Election 2026 | 18 தொகுதிகளில் நேருக்குநேர் மோதும் அதிமுக- காங்கிரஸ்
Published on

திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு இன்று எந்தெந்த தொகுதிகள் என்பதை அறிவித்தது. அதன்படி பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகை, ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர் (தனி), கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் அதிமுக-வும் காங்கிரஸ் கட்சியும் பொன்னேரி, ஈரோடு கிழக்கு, கடலூர், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 தொகுதிகளில் நேருக்குநேர் போட்டியிடுகின்றன.

தலா 5 தொகுதிகளில் தேமுதிக உடனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் அதிமுக நேரடியாக மோதுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com