முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்..!- ஆர்.எஸ்.பாரதி

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமாவிற்கு செய்ததற்கு குதிரை பேரம் தான் காரணம்.
RS Bharathi
Published on

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 1ம் தேதி ஆளுநர் அர்லேகரை சந்தித்து முதலமைச்சர் விஜய் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று புகார் மனு கொடுத்திருந்தார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்திருந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கடந்த 2-ந்தேதி தங்கள் ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

குதிரை பேரம்

அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசுகையில்,"நாங்களாக வரவில்லை. த.வெ.க. எங்களை அணுகியது. அதனால் நாங்கள் த.வெ.க.வில் இணைந்தோம்" என்றார்.

புகார்

அதாவது த.வெ.க. தங்களை அணுகியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளிப்படையாக பேசியது த.வெ.க.வின் குதிரை பேரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மெயில் மூலம் ஆளுநர் புகார் அனுப்பி உள்ளார்.

முதலமைச்சர் விஜய் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அந்த மனுவை சி.பி.ஐ.க்கும், ஆர்.எஸ்.பாரதி அனுப்பி வைத்துள்ளார்.

கீழ் தரமான பேச்சு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கு குதிரை பேரம் தான் காரணம். அதற்கான ஆதாரம் உள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் பேசியது தொடர்பாக புகார் அளித்துள்ளோம்.

குதிரை பேரம் தொடர்பாக கடந்த 4-ம் தேதி ஆளுநரை சந்தித்து புகார் அளித்தோம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதுதான் குதிரை பேரம் நடந்ததற்கான ஆதாரங்கள்.

கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டதாக கீழ் தரமாக பேசுகிறார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com