TN Assembly Election: அ.தி.மு.க கூட்டணியில் இறுதியானது தொகுதி பங்கீடு: பா.ஜ.க- 27, பா.ம.க 18, அ.ம.மு.க- 11

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 27 தொகுதிகளில் பாஜக கட்சி களமிறங்குகிறது.
TN Assembly Election: அ.தி.மு.க கூட்டணியில் இறுதியானது தொகுதி பங்கீடு: பா.ஜ.க- 27, பா.ம.க 18, அ.ம.மு.க- 11
Published on

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக பியூஷ் கோயல் இன்று சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்கள் வருகை தந்துள்ள நிலையில், தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு கடந்த முறையை விட 7 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com