TN Assembly Election | திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் TVK - சென்னை தங்கசாலை பகுதி மக்கள் சொல்வது என்ன?

விஜய் மேடைகளில் அதிகமாக பேசி வருகிறார். என்ன தான் செய்கிறார் என்று பார்ப்போம்.
TN Assembly Election | திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் TVK - சென்னை தங்கசாலை பகுதி மக்கள் சொல்வது என்ன?
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி முடிவாகி உள்ள நிலையில் சென்னை தங்கசாலை (Mint Street) பகுதியில் உள்ள மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.

பரம்பரையாக தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவோம். கலைஞர் நல்லது செய்தார். மு.க.ஸ்டாலின், உதயநிதி நல்லது செய்கிறார்கள். எங்கள் ஓட்டு தி.மு.க.வுக்கே. தி.மு.க. திட்டங்களால் மகளிர் பயனடைந்துள்ளோம். அவருக்கு தான் ஓட்டு... என்று பெண்கள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வுக்கே எங்கள் ஓட்டு, எப்போதும் இரட்டை இலைக்கே போடுவோம் என்று பலர் தெரிவித்தனர்.

விஜய் மேடைகளில் அதிகமாக பேசி வருகிறார். என்ன தான் செய்கிறார் என்று பார்ப்போம். ஆட்சி மாற்றம் வர வேண்டும். தளபதி விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம். புது ஆளுக்கு வாய்ப்பு கொடுப்போம். குடும்பமாக விஜய்க்கு ஓட்டு போடுவோம் என்றும் இளம் பெண்கள், நடுத்தர வயதினர் தெரிவித்தனர்.

வடசென்னையில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக உள்ளது. படிக்கும் மாணவர்களிடம் கஞ்சா உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. விலைவாசி உயர்வு, தங்கம் விலை உயர்வை சுட்டிக்காட்டிய ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தேர்தல் நேரத்தில் செய்து ஒன்றும் பயன் இல்லை. இருப்பவர்களே அதிகம் பயன் அடைகிறார்கள். ஆட்சி மாற்றம் வரட்டும். இலவச பஸ் நாங்கள் கேட்கவில்லை. வீடும் கொடுக்கவில்லை என்று அதிருப்தியடைந்த பெண்கள் பலர் தெரிவித்தனர்.

மக்கள் விரும்புவது யாருடைய ஆட்சியை என்பது விரைவில் தெரிய வரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com