‘பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றும் தருணம் இது’ - தொகுதி மறுவரையறை விவகாரத்தில் இபிஎஸ் கருத்து

தேர்தல் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் முதலமைச்சரின் செய்தி என இபிஎஸ் பேசியுள்ளார்.
‘பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றும் தருணம் இது’ - தொகுதி மறுவரையறை விவகாரத்தில் இபிஎஸ் கருத்து
Published on

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது.

இதனிடையே இந்த தொகுதி மறுவரையறையால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

“தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் முதலமைச்சரின் செய்தி. நாடாளுமன்றத்தை கூட்டுவது மத்திய ஆட்சியாளர்கள். 5 மாநிலங்களுக்குதான் தேர்தல் நடைபெறுகிறது. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்பது நீண்டநாள் கோரிக்கை. அந்த கோரிக்கையை நிறைவேற்றுகின்ற தருணம் இது.

அதை அவரால் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளுக்கான கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது. இதை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

தேர்தல் தோல்வி பயத்தில் இந்த கருத்து வந்துள்ளது.” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com