‘பறக்கவேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி’ - கட்சிக்குள் வெடித்த மோதல்... வீடியோ வெளியிட்ட ஜெயக்குமார்!

அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் நிலவும்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘பறக்கவேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி’ - கட்சிக்குள் வெடித்த மோதல்... வீடியோ வெளியிட்ட ஜெயக்குமார்!
Published on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. எஸ்பி.வேலுமணி தலைமை, இபிஎஸ் தலைமை என தற்போது இரண்டு பிளவாக கட்சி செல்கிறது.

இபிஎஸை சட்டமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்க 17 எம்.எல்.ஏக்களும், எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து 30 எம்.எல்.ஏக்களும் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

இந்த 30 எம்.எல்.ஏக்களும் சிவி சண்முகம் தலைமையிலான ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் எஸ்.பி.வேலுமணி தரப்பு, செங்கோட்டையனின் ஆதரவுடன் தவெகவில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்சிக்குள் இப்படி குழப்பம் நிலவும்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அதிமுக கொடி பறக்க, ‘பறக்கவேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி’ என்ற விவசாயி படத்தின் எம்.ஜி.ஆர் பாடல் ஒலிக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com